யாயும் யாயும் - 41

  • 471
  • 216

41. மரணத்தின் அன்னைமுகத்தில் எவ்வித உணர்வையும் காட்டிக்கொள்ளாமல் இருக்க, மாயா தனது மேல் பற்களால் தன்னுடைய கீழ் பற்களை கடித்துக் கொண்டாள். அப்போது, எல் டையாப்ளோ மாயாவின் அருகே வந்தான். தனது பற்களால் சுருட்டைக் கடித்தபடி,“இவன் யாருன்னு தெரியுமா?” என்று கேட்டான்.நந்தனை தன் முன் நிறுத்திய போதே தனது கண்ணில் ஏற்பட்ட ஒரு சிறு அசைவை அவர்கள் கவனித்திருப்பார்கள் என்பது மாயாவிற்கு தெரிந்திருந்தது. அதனால், இப்போது நந்தனை தெரியாது என்று சொன்னால் தனது பொய்யை அவர்கள் கண்டு கொள்வார்கள் என்பதை மாயா அறிந்திருந்தாள்.“தெரியும். ஜீயூஸ் ஆர்மியோட சீனியர் அதிகாரி. ஆர்மிக்குள்ள சிலர் எனக்கெதிரா பிரச்சனை பண்ணுன போது, இவர் தான் எனக்காக வந்து பேசுனாரு”“ரொம்ப நல்லதா போச்சு.” என்று சொல்லிவிட்டு எல் டையாப்ளோ மாயாவின் கையில் ஒரு கனமான இரும்பு ராடைக் கொடுத்தான்.“சான்ட்ரா, நீ இதுவரைக்கும் எங்ககிட்ட சொன்ன எல்லாத்தையும் நாங்க நம்புறோம். ஆனா, அதுக்கு நீ சொன்னதை நீ நிரூபிச்சுக்