38. குக்கிமோகனை உற்று நோக்கிக் கொண்டிருந்த இரு கண்களும் மெல்ல மெல்ல பதுங்கி வந்து திடீரென அவன் முன் பாய்ந்து வந்து நின்றது. மோகன் விறுக்கென எழுந்து நின்றான். பின்னர், தான் கவனித்தான் பொசு பொசுவென்ற முடியுடன் உருண்டை வடிவில் ஒரு நாய்க்குட்டி வந்து நின்றது. இரு உள்ளங்கைகளுக்குள் அடங்கி விடக் கூடிய அளவே இருந்த அந்த நாய்க்குட்டி, வெள்ளை நிறமும் பழுப்பு நிறமும் சரி விகிதத்தில் கலந்து இருந்தது. ஏதோவொரு இசைத் துணுக்கிற்கு அசைவது போல அந்த நாய்க்குட்டி தன் வாலை ஆட்டிக் கொண்டு நின்றது.எதிரே இருப்பது எவ்வித ஆபத்தும் இல்லாத ஒன்று என்பதை உணர்ந்து கொண்ட மோகன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அந்த நாய்க்குட்டியை நோக்கி தனது உள்ளங்கையை நீட்டினான். அது அவன் விரல்களை முகர்ந்து பார்த்து விட்டு அவன் உள்ளங்கையை நக்கியது. பின்னர், அவன் தன்னிடமிருந்த மீனை அதற்கு கொடுத்தான். அந்த மீனை தின்று விட்டு அந்த