யாயும் யாயும் - 37

  • 540
  • 180

37. பயிற்சிமோகனுக்கு சிமுலேஷனில் தேர்வுகள் தொடங்கியது. திருச்செந்தாழையும் மோகனும் ஒரு அடர்ந்த காட்டின் நடுவே நின்றனர்.“மோகன் உன்னோட டெஸ்ட் சிம்ப்பிள் தான். இந்தக் காட்டுக்குள்ள நீ இருபத்தி நாலு மணி நேரம் உயிரோட இருக்கணும். இந்தா இதைக் கையில கட்டிக்கோ” என்றபடி மோகனிடம் ஒரு கைக்கடிகாரத்தை நீட்டினான்.மோகன் அந்தக் கைகடிகாரத்தை வாங்கி அணிந்தவுடன், “மோகன், இந்தக் கடிகாரம், இந்த சிமுலேஷன்ல நீ இருக்கிற நேரத்தைக் காட்டும். நான் சிமுலேஷன்ல இருந்து வெளியில போனதும் இதுல டைம் ஸ்டார்ட் ஆகும். ஒரு நாள் முடிஞ்சதும் இந்தக் கடிகாரத்துல பச்சைக் கலர்ல லைட் எரியும். அப்படி பச்சைக் கலர்ல எரிஞ்சுட்டா நீ இந்த டெஸ்ட்ல தேறிட்டேன்னு அர்த்தம், சிமுலேஷன்ல இருந்து வெளிய வந்ததும் நீ இந்திர சேனையில ஒருத்தன்.உன்னால ஒருவேளை இங்க தாக்குப் பிடிக்க முடியாட்டி, இந்த சிவப்பு பட்டனை நீ ஒருமுறை அழுத்துனா போதும், நீ சிமுலேஷன்ல இருந்து வெளியில வந்து நீ உன்னோட