யாயும் யாயும் - 33

  • 312
  • 120

33. விசாரணைஇறந்த அந்த மூதாட்டியை கருப்பு அங்கி அணிந்திருந்த நால்வர் வந்து தூக்கிச் சென்றனர். மாயாவும், சுற்றியிருந்த அனைவரும் அந்த மூதாட்டியின் உடல் பின்னே சென்றனர். அந்தக் குகையின் இடது புறம் செல்லச் செல்ல அங்கொரு சிறப்பு மயானம் இருப்பதை மாயா கவனித்தாள். அந்த மயானம், மிக சுத்தமாக அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது. இத்தனை நாட்கள் தங்களுக்காக தியாக வாழ்க்கையை வாழ்ந்தவர்களுக்கு தரக் கூடிய மரியாதை என அந்த மயானத்தை பராமரிப்பதை அவர்கள் நினைத்தார்கள்.அங்கே, அந்த முன்னாள் தலைவிக்காக தோண்டி வைக்கப்பட்டிருந்த குழி இருந்தது. அந்தக் குழியில், அந்த மூதாட்டியின் உடலை ஒரு சந்தனப் பெட்டியில் வைத்து உள்ளே இறக்கினர். பின், அவளது உடலுக்கு ஜீயூஸ் படையினரின் ராணுவ மரியாதை தரப்பட்டது. அனைவரும் தங்களது ஆயுதங்களை, தரையில் வைத்தனர். பின், அனைவரும் அந்தப் பெட்டியின் மீது மண்ணைப் போட்டு மூடினர். பின், அங்கு சமாதியை கட்டுவதற்கான பணி தொடங்கியது. சிரியஸ் என்றழைக்கப்பட்ட ஜீயூஸ்