31. அன்புள்ள கதிரவனுக்கு…தனது தந்தையின் கடைசிக் கடிதத்தை கீழே வைத்தான். அவன் கண்களில் இருந்த கடைசி சொட்டுக் கண்ணீர் கீழே விழ முடியாமல் தேங்கி நின்றது. தனது விரலால் அந்தக் கண்ணீரை துடைத்தான். அவனது தந்தையின் விருப்பம் என்னவென்று புரிந்தது. அந்த விருப்பத்தை தன்னுடைய வாழ்க்கை லட்சியம் எனக் கொண்டு அவனது அத்தை அவனுக்காக செய்த தியாகங்கள் புரிந்தது. அனைவருக்கும் ஹீரோ மாதிரியான ஒரு அப்பா கிடைப்பதே அரிது. ஆனால், அவனது தந்தையோ ஒரு சூப்பர் ஹீரோ மட்டுமல்ல, பல சூப்பர் ஹீரோக்களின் குருவாக இருந்தவர். அப்படிப்பட்ட ஒருவர் எதற்காக தன் மகனை இந்த விஷயங்கள் எதன் நிழலும் படாதவாறு தன்னைப் பொத்தி வளர்க்கச் சொன்னார். தான் செய்வதற்கு பல உன்னதக் காரியங்கள் இருக்கின்ற போது தனது தந்தை எதற்காக தான் ஒரு சாதாரணனின் வாழ்க்கையை வாழ வேண்டும் என விரும்பினார்?“உன்னோட எல்லாக் கேள்விக்கும் பதில் கிடைச்சதா மோகன்?” என்று கேட்டாள் அத்தை.“கிடைச்சது