27. பொக்கிஷம் “உன் அப்பாவுக்கு இந்தப் போருல ஒன்னும் ஆகல. சொல்லப் போனா, உன்னோட அப்பாவை யாரும் எதுவும் பண்ணியிருக்க முடியாது.எங்களுக்கு உங்கப்பா தான் கமேண்டரா இருந்தாரு. அவரு உருவாக்குன சில டெக்னிக்ஸை வைச்சு தான் இப்போ நாங்க எங்களோட புது பசங்களை ட்ரெயின் பண்ணிட்டு இருக்கோம்.இங்க பாரு” என்று சொல்லி விட்டு திருச்செந்தாழை தன்னுடைய வெள்ளிக் காப்பைக் காட்டினான்.“ஒவ்வொரு இந்திர சேனை வீரனும் செய்ற சாதனைகளை பொறுத்து அவன் எடுத்துக்கிட்ட அசைன்மெண்ட்ஸ்ல அவனோட வெற்றிகளைப் பொறுத்து. இங்க, இரும்பு, செம்பு, வெள்ளி, தங்கம்னு காப்பு கொடுப்பாங்க. அது ஒரு பதவி. இரும்பிலிருந்து தங்கத்துக்கு போக போக ஒரு வீரனோட பொறுப்புகளும் சக்திகளும் அதிகமாகும். தங்கக்காப்பு போட்ட ஒருத்தர் தான் மொத்த இந்திரசேனைக்கும் கமேண்டர். அப்படியொருத்தரை சேனையோட தலைமை கூடி தேர்ந்தெடுக்கும். இப்போதைக்கு இந்த உலகத்துல ஒரே ஒரு தங்கக்காப்பு கமேண்டர் மட்டும் தான் இருக்காரு. அவரும் இன்னும் ஒரு மாசத்துல ரிடையர் ஆயிடுவாரு.