மலர் வாங்கிய அடியில் இன்னும் எழுந்திருக்காமல் இருக்க, அனைவரும் அவளை ஏதோ தீண்டத்தகாதவளைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.மகேஷின் கணவரும் மலரைப் பாவமாகப் பார்த்துக்கொண்டிருக்க, அவனின் மனைவியோ மலரை முறைத்துவிட்டுத் தன் கணவனை அங்கிருந்து இழுத்துக்கொண்டு சென்றாள்.அனைவரும் அங்கிருந்து சென்றவுடன் அவள் அருகில் வந்த பிரதீப், “சாரி, சித்தி, வலிக்குதா?” என்று அவளின் காயத்தைத் தன் பிஞ்சு கரங்களால் தொட்டுப் பார்த்து, “என்னாலதான் உங்களுக்கு அடிபட்டுச்சு,” என்று அவளிடம் கொஞ்சும் மொழியில் பேசிக்கொண்டிருந்தான்.அப்போது உள்ளே இருந்து அவனின் தாய், “பிரதீப், அங்கே இன்னும் என்ன பண்ற? உள்ளே வா,” என்று சத்தம் வந்ததும், பிரதீப் உள்ளே செல்லாமல் மலரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். “பிரதீப், நீ உள்ளே போ. உன்னை கூப்பிடுறா அவ! இங்கே வந்தா நீ என்கிட்ட பேசிட்டு இருக்கிறதை பார்த்து உன்னைத்தான் திட்டுவாங்க,” என்றாள். “நான் உள்ளே போறேன். நீ ஹாஸ்பிட்டலுக்குப் போ,” என்று பிரதீப் அங்கிருந்து சென்றான்.பிரதீப் அங்கிருந்து சென்றதும், மலர்