21. டார்ச்சர் டெஸ்ட்மோகன் அவனது கண்கள் விரிய அவனை நோக்கி வருகிற மரணத்தை அதிர்ச்சியுடன் பார்த்தபடி உறைந்து நின்றான்.திடீரென அந்த வேல்க்கம்பு அந்தரத்தில் அப்படியே நின்றது. மோகனுக்கு இது வரை நடந்தது எப்படி புரியவில்லையோ அது போல இப்போது நடப்பதும் புரியாமல் திகைத்து நின்றான்.மயில்வாகனனும் ஒரு நொடி அதிர்ச்சி அடைந்து, பின்னர் சுதாரித்துக்கொண்டான். இது திருச்செந்தாழையின் வேலை. அப்போது தான் மயில்வாகனன் தன்னிலைக்கு வந்தான். விசாரணைக்கு கிளம்பிய போது,"என்ன ஆனாலும் அந்தப் பையனை உயிரோட கொண்டு வரணும்" என்று திருச்செந்தாழை சொன்னது நினைவிற்கு வந்தது.திருச்செந்தாழை, மயில்வாகனனுக்கும் மோகனுக்கும் இடையே வந்து நின்றான். அங்கே அந்தரத்தில் நின்று கொண்டிருந்த வேல்க்கம்பை தனது கையால் தொட்டு எடுத்தான். மயில்வாகன் தனது வெள்ளிக் காப்பைத் தொட்டபடி "பவர் டவுன்" என்றான். பின்னர், ஒரு பெரும் வெள்ளை ஒளி அவனை மூடி மறைந்தது. அப்படி மறைகின்ற போது அவனது கவச உடையும் மறைந்து அவன் முதலில் அணிந்திருந்த