20. மயிலுக்கு போர்வை"சரி அந்த ஒளடதத்தை எப்படிச் செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டாள் கண்ணகி."வள்ளுவன் சொன்ன வழியில் தான். நோய் நாடி நோய் முதல் நாடி. ஒரு மனிதன் எப்படி இறக்கிறான்? அவன் உடலில் உள்ள உறுப்புகள் அதனுடைய வேலையை சரியாக செய்யாத போது. அந்த உறுப்புகளை இன்னும் ஆராய்ந்து பார்த்தால் அவை எல்லாமே சிறு சிறு உயிரணுக்களால் ஆகி இருக்கிறது. அந்த ஒவ்வொரு உயிரணுவும் தனக்கான உணவைத் தயாரித்துக் கொண்டு அதனுடைய வேலைகளை சரியாக செய்கிறது. ஒரு உயிரணு சிதையத் தொடங்கியதும் அது பக்கத்தில் இருக்கிற இன்னொரு உயிரணுவையும் சிதைக்கத் தொடங்குகிறது. அந்தச் சிதைவு மெல்ல மெல்ல வளர்ந்து மொத்தமாக அந்த உறுப்பையே சிதைத்து அதனை செயல் இழக்கச் செய்கிறது. உறுப்பு சிதைகின்ற போது மனிதனும் சிதைகிறான்.ஒரு வீரனுக்கு போரில் அடிபடுகிறது. அவனது உயிரணுக்கள் சிதைகிறது. பின்னர், அந்தச் சிதைவு மெல்ல மெல்ல பரவி அவனுடைய உறுப்புகள் செயல் இழந்து