16. டையோனைசஸ்ராகுல் என்கிற டையோனைசஸ் என்கிற கிரேக்கக் கடவுளும் மாயாவும் கேண்டீனுக்குச் சென்றனர்.இரண்டு காஃபி என மாயா ஆர்டர் செய்தாள்."எனக்கு எதுக்கு காஃபி எனக்கு தான் இது இருக்குல்ல" என்று தனது கருப்பு நிற ஸ்டீல் வாட்டர் பாட்டிலைக் காட்டினார் ராகுல்."காலேஜ்குள்ள அதெல்லாம் நாட் அலோவ்ட் அன்க்கிள் அதனால காஃபி மட்டும் தான்." என்றாள் மாயா."நான் யார்னு தெரியுமில்ல எனக்கே கட்டுப்பாடு போட இந்தக் காலேஜால முடியுமா?""அய்யோ, ராகுல் அன்க்கிள் நீங்க திடீர்னு ரிகர்சல் ஹால்ல வந்துட்டதுனால தப்பிச்சீங்க. கேட் வழியா வந்திருந்தா உங்களை உள்ளேயே விட்டிருக்க மாட்டாங்க.""என்னை நிகழ்த்துக் கலையோட கடவுள்னு சொல்றாங்க என்னையே உள்ள விட மாட்டாங்களா?""நீங்களாவது கடவுள் தான், நாங்கெல்லாம் இங்கேயே தான் படிக்கிறோம். ஆனாலும் ஐ.டி. கார்டு போடாட்டி எங்களையே உள்ள விட மாட்டங்க""ஓஹோ! இவனுக அவ்ளோ பெரியா லார்டுகளா?" என்றார் ராகுல்.மாயா புன்னகைத்து விட்டு, “அது சரி அன்க்கிள் உங்களுக்கு வாழ்க்கை எப்படி போகுது?""என்ன