என் வானின் வானவில் நீ - 4

  • 204

வானவில்-04"யாரடா அடிக்க போறீங்க அதுக்கு ஏன் டா நான் வரணும்? "கேட்டபடியே யுகாதித்தன் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு சென்று தான் ஆக வேண்டியதிருந்தது. ஏனெனில் அவன் இழுத்துச் சென்ற விதம் அப்படி. கழுத்தோடு கையைப் போட்டு விலக விடாமல் நகர்த்தி இருந்தான் அவனை. "சுதா... கோவப்படாதப்பா" பாட்டியின் குரல் தீனமாக ஒலிக்க"சும்மா கெட கெழவி, அவனுக்கு எவ்வளவு ஏத்தம் இருந்தா ஊருக்குள்ள வந்திருப்பான். ஏழு வருஷமா காங்கலையேனு நெனைச்சா இப்ப பவுசா வந்திருக்கியான்." என்று குதித்தான் சுதாகரன். "எப்படி டா இந்த வருஷம் வந்தான் அவேன். ஒரு வேளை அவேன் சேக்காளி பயலுவ வெசாரண போட்ருப்பானுவளோ?!"என்று பத்மநாபனின் தம்பி சந்தேகம் கேட்க"இருக்கும் சித்தப்பு, நம்ம புள்ள வர்றதை எங்கனயோ மோப்பம் புடிச்சுத்தேன் வந்திருக்கான். இன்னிக்கு அவேன் மென்னிய கடிச்சு துப்பல நா(ன்) சுந்தரபாண்டி மவேன் இல்ல" என்று சூளுரைக்க தேஜஸ்வினி அதிர்ந்து விழித்தாள். "அண்ணா !"என்று பதறிப் போய் அழைக்கவும்"நீ ஒண்ணுமேட்டுக்கு வெசனப்படாதத்தா, நா இருக்கேனில்ல,