யாயும் யாயும் - 13

  • 417
  • 135

13. இந்திர சேனைதிருச்செந்தாழையும் மயில்வாகனனும் பேசிக் கொண்டே அந்த பாக்ஸ் பகுதியை விட்டு கீழே இறங்கினர்."என்ன திரு சொல்ற ஏற்கனவே இருக்கிற பிரச்சனையவே சமாளிக்க முடியாம திணறிட்டு இருக்கோம். இதுல இன்னொரு பிரச்சனையா""இப்ப வந்திருக்கிறது உண்மையிலேயே பெரிய பிரச்சனை தானான்னு முதல்ல எனக்கே தெரியல மயிலு. ஆனாலும் பிரச்சனையா இருக்க வாய்ப்பு இருக்குன்னு தான் சொல்றேன். அதை உறுதி படுத்தத் தான் நான் இப்போ இங்க அவசரமா வந்தேன்.இருவரும் பேசிக் கொண்டே தரைத் தளத்திற்கு வந்தனர். மயில் வாகனன் பல வருடங்களாக பயன்படுத்தாமல் இருந்த பழைய அனலாக் மாடல் மீட்டர் பாக்ஸைத் திறந்தான். மீட்டர் பாக்ஸின் பின்புறம் ஒரு லிவர் இருந்தது. அவன் அந்த லிவரைப் பிடித்து இழுத்தான். மீட்டர் மாட்டியிருந்த பலகை முன்னுக்கு வந்தது. அந்தப் பலகையின் பின்புறம் ஒரு பயோ மெட்ரிக் சிஸ்டம் இருந்தது. அதில் மயில்வாகனன் தனது விரலை வைத்ததும் தரைக்குள்ளிருந்து ஒரு லிஃப்ட் மேலேறி வந்தது.திருச்செந்தாழையும்