யாயும் யாயும் - 8

  • 282
  • 96

8. யூரோப்பா5000 வருடங்களுக்கு முன்பு, கிரேட்டா தீவில் ஒருநாள், யூரோப்பா தன் அரண்மனை மாடத்தில் நின்று கொண்டு கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள். தன் வீட்டை விட்டு வந்து ஆறு மாதங்கள் ஆகிப் போனதை அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. எப்போதும் அவளிடம் துடுக்குத் தனமாக பேசும் அண்ணனிடம் பேசி ஆறு மாதங்கள் ஆகிறது. கேட்பதையெல்லாம் கேட்பதற்கு முன்னரே தரும் தந்தையைப் பார்த்தே ஆறு மாதங்கள் ஆகிறது. இவர்களுக்கு கூட தான் எப்படி அவர்களை விட்டு நீங்கினாள் என்பது தெரியும் ஆனால், அவள் மாளிகையில் அவள் வளர்த்துக் கொண்டிருந்த அன்னப் பறவை அவளது இன்மையை எப்படி புரிந்திருக்கும். இந்த அரண்மனைக்கும் இந்த தீவிற்கும் அவள் தான் அரசி, ஆனால், அது அவளுடையதைப் போல அவளால் உணர முடியவில்லை. இந்த இடமும் இந்த அரண்மனையும் அவளது கணவன் ஜீயூஸுடையது. அவன் தான் அவளைக் காதலிப்பதாக சொன்னான். அவன் தான் அவளை தான் திருமணம் செய்து கொள்வதாக சொன்னான்.