இருளின் நிழல் - 1

  • 45

அத்தியாயம் 1 கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய பேருந்து நிலையம் தான் மார்த்தாண்டம் பேருந்து நிலையம்.இங்கு எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் ஒரு இடம். ஏனென்றால் அந்த பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து இல்லாத ஊர்களே கிடையாது.அது மட்டுமல்ல கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியின் தலைநகரம் என்றே கூறாலாம். ஏனென்றால் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் மார்த்தாண்டம் வரவேண்டும் என்ற நிலை. அதானால் அந்த ஊர் 24 மணிநேரமும் பரப்பரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். சரி இந்த ஊரின் அருமையை நாம் கதையோட்டம் போகிற போக்கில் காண்போம் இப்போது கதைக்குள் செல்லலாம்.நேரம் காலை 6.30 மணி. ஊரின் நெரிசல் களத்தில் தினமும் நிகழும் போல இன்று நகர்வுகள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தன. அதோடு மார்த்தாண்டம் பேருந்து நிலையமும் பரபரப்பாக காணப்பட்டது ஒரு புறம் துர்நாற்றம் மறுபுறம் டீ கடைகளில் காயும் மசாலா வாசனை, டீயும் பஜ்ஜியும் கையோடு கூட்டமாக ஆட்களை இழுத்துகொண்டிருக்க. இன்னொருபுறம் அழகிய மண்டபம்,