நெருங்கி வா தேவதையே - Part 38

  • 459
  • 135

என்ன சொல்லுற ரஷ்மி. ஆமாடா அப்பா எனக்கு alliance பார்க்கிறார் அப்படின்னு அம்மா சொன்னாங்க. நீ என்னை லவ் பண்ணுற விஷயத்தை அப்பா கிட்ட சொன்னியா ? இல்லை எனக்கு பயமாயிருக்கு அவர் உன்னை ஏதாவது பண்ணிட்டா நான் சொல்ல மாட்டேன் விதிப்படி நடக்கட்டும் நாம ஓடிப்போய் கல்யாணம் பண்ணிப்போம் என்றாள் ரஷ்மி. நீ சொல்லுறது உனக்கே நியாயமா படுதா? எனக்கு இதை தவிர வேறு வழியில்லை. நீ வந்ததும் மத்ததை பேசிக்கலாம் என்றாள். சௌமியாவிடம் ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். இதுக்கெல்லாம் பயப்படாதே தாலி கட்டும் நேரம் வரை அவகாசம் இருக்கிறது, நான் கிருஷ்ணன் சாரை விட்டு பேச சொல்லட்டுமா? வேண்டாம் மேம் அவள் எனக்கேதும் ஆகி விடுமோ என பயப்படுகிறாள். சீக்கிரம் நான் ஒரு வேலையை தேடிக்கொண்டு அவளை அழைத்துக்கொள்கிறேன் என்றான்.அவசரப்படாதே ராகவ் நீ சின்ன பையன். நான் ஏதாவது செய்ய முடியுமா என்று கிருஷ்ணன் சாரிடம் கேட்கிறேன்