காமிரா மேன் ரவி, கூத்துபட்டறை நந்தினி,டைரக்டர் பிரவீனா மியூசிக் ஆல்பம் பற்றி டிஸ்கஸ் செய்தனர். மியூசிக் ஆல்பம் தலைப்பு வைக்க எல்லோருடைய ஆலோசனைகளையும் கேட்டிருந்தனர். காற்றே என் வாசல் வந்தாய் என்ற தலைப்பு எல்லோருக்கும் பிடித்திருந்தது. அதையே தலைப்பாக வைக்க தீர்மானித்திருந்தனர். ஒரு வாரம் ஆக்டிங் கோர்ஸ் நடத்த நந்தினி தீர்மானித்திருந்தாள் . பரஸ்பர அறிமுகங்களுக்கு பிறகு பூஜாவும், அருணும் சில காட்சிகளை நடித்து காட்டினர். அவர்களுக்கு சினிமா மொழியை சொல்லிக்கொடுத்தாள் நந்தினி. ஒரு சில சமயங்களில் பூஜாவோ, அருணோ உணர்ச்சிவசப்படும்போது அதை கண்ட்ரோல் செய்ய சொல்லிக்கொடுத்தாள். ராகவுக்கும், ரஷ்மிக்கும் நடிக்க ஆசையாக இருந்தது. ஆனால் அவர்கள் பெற்றோர் சம்மதம் தராததால் வெறுமே வேடிக்கை பார்த்தனர். முதல் நாள் கிளாஸ் முடிந்ததும் இருவரையும் கூப்பிட்டு பேசினாள் நந்தினி. நன்றாக நடிக்கிறீர்கள் ஆனால் நடிப்பது போல தெரிய கூடாது இன்னும் இயல்பாக இருக்க வேண்டும் என்றாள் . நான் சில முக பாவங்களுக்கு