எல்லோருமே ஸ்ருதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்து அவளுடைய ஃபர்ஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் பார்க்க ஆவலாய் இருந்தனர். அவளும் தன்னை தயார் செய்து கொண்டிருந்தாள்.அருணுடைய வகுப்பில் எல்லோரும் இன்டஸ்ட்ரியல் விசிட் போக தயாராய் இருந்தார்கள். அருணை எவ்வளவோ வற்புறுத்தியும் தான் வரவில்லை என சொல்லிவிட்டான். தென்றலும் சுகன்யாவும் கூட வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். ராகவ், ரஷ்மி அப்புறம் ஜோவும் போவதாக பிளான் செய்திருந்தார்கள். சௌமியாவும் வரவில்லை என்று சொல்லிவிட்டாள். மேட்டூர், சேலம், ஒகேனக்கல் ,கொல்லிமலை , ஏற்காடு, போன்ற இடங்களை பார்ப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரஷ்மிக்கு மகிழ்ச்சியாய் இருந்தாலும் சௌமியா வராதது ஏமாற்றமாய் இருந்தது, ஜோ தென்றலையும், சுகன்யாவையும் மறுபடி ஒருமுறை கூப்பிட்டு பார்த்தான். அவர்கள் இப்போதைய சூழ்நிலையில் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ராகவ் ,ஜோ பிரச்சனை இல்லாமல் போய்விட்டு வர வேண்டும் என சௌமியா கேட்டுக்கொண்டிருந்தாள். என்ன ரஷ்மி எல்லாம் எடுத்துக்கொண்டாயா என்றான் ராகவ் அங்கே வந்து குளிருது கொஞ்சம் கட்டிப்பிடி