என்ன பூஜா அதற்குள்ளாக கிளம்பி விட்டாய்... அதெல்லாம் ஒன்னும் இல்லை வந்த வேலை முடிந்து விட்டது அதான் கிளம்பிவிட்டேன் இன்னும் ஒரு நாள் இருந்து விட்டு போகலாமே..யாருக்காக? யாருக்காக நான் இருக்க வேண்டும் நீ தான் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறாயே.. பூஜா ப்ளீஸ் என்னை புரிந்து கொள் நான் இப்போது இருக்கும் நிலைமையை உனக்கு எத்தனை தடவை சொல்வது எனக்கு கொஞ்சம் டைம் கொடு என்றான் அருண்.உனக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு தருகிறேன் இன்னும் ஒரு வாரத்தில் நீ பதில் சொல்லாவிட்டால் என்னை மறந்து விடு அவ்வளவுதான் நான் போகிறேன் என்றாள் பூஜா.அருண் ரயில்வே ஸ்டேஷன் வரை போயிருந்தான் பூஜா முகம் அவ்வளவு எளிதில் மறக்க கூடியது அல்ல அவன் மனதிலும் மறக்க முடியாத நிகழ்வாக அன்றைய தினம் அமைந்தது.ஜோ அருணை விசாரித்தான் என்ன மச்சான் ஆச்சு பூஜா கோவமா போறாளே என்றான். நான் என்னடா செய்யறது ஒரு பக்கம்