நெருங்கி வா தேவதையே - Part 12

ரஷ்மி பர்த்டேவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என ராகவ் நினைத்தான். எல்லோரையும் தனித்தனியே பார்த்து பேசினான். அவள் மறக்க முடியாத பர்த்டேவாக இது இருக்க வேண்டும் எனவும் நினைத்தான். அருணோ அவளிடம் எப்படி காதலை வெளிப்படுத்துவது என்ற சிந்தனையில் இருந்தான். ஜோ அவளுக்கென பிரத்யேகமாக ஒரு வாழ்த்து பாடலை பாடுவது என முடிவெடுத்தான். தென்றலும், ராகவும் ரஷ்மிக்கு ஒரு பட்டு சாரி வாங்கி வைத்திருந்தனர். குமாரும், சௌமியாவும் சேர்ந்து ஒரு மோதிரம் வாங்கினர். சுகன்யாவும் ஒரு கிப்ட் வாங்கி வைத்திருந்தாள். ஜோ எப்படியோ ராகவிடம் அருண் ரஷ்மிக்கு ப்ரபோஸ் செய்ய போவதை சொல்லிவிட்டான். நீ அதை தடுக்க கூடாது எனவும் சொல்லிவிட்டான். தேவையில்லாமல் அவர்கள் விஷயத்தில் தலையிட கூடாது என்றான். இதை கேட்ட ராகவ் திகைத்து போனான். தன்னால் ரஷ்மி இன்றி இருக்க முடியுமா என்றெல்லாம் யோசித்தான். சரி ஜோ ரஷ்மி விருப்பமே என் விருப்பம். அவள் விருப்பத்துக்கு எதிராக நான்