ஜான் திகைத்து போனவனாய் அங்கிருந்து ஓடினான். ஸ்வேதாவும் ,சிவாவும் செய்வதறியாது தவித்து போயினர். போலீஸ் விரைந்து வந்து விசாரித்தது. ஜான் அடுத்த 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டான். ஸ்வேதாவும், சிவாவும் ரம்யா குறித்து வேதனை அடைந்தனர். ரம்யாவின் பெற்றோருக்கு தகவல் குடுத்தனர். விமானத்தில் ரம்யாவின் உடல் சென்னைக்கு அனுப்பப் பட்டது. சிவா ஸ்வேதாவுடன் வேதனையுடன் அமெரிக்காவை விட்டு கிளம்பினான். ரம்யாவின் நினைவுகளை என்றும் அவனால் மறக்க முடியாது. ஜான் ஆனந்த் சொல்லித்தான் சிவாவை கொல்ல முயற்சித்ததாக ஒப்புக்கொண்டான். ஆனந்தும் சென்னையில் அரெஸ்ட் செய்யப்பட்டான்.ரம்யா குடுத்த ஹார்ட் டிஸ்கை ஸ்வேதா சிவாவிடம் குடுத்தாள் . அரவிந்த் மனைவியும் ,சேகரும் அதில் உள்ள தகவல்களை பயன்படுத்தி அந்த நெட்வொர்க்கில் உள்ள மீதமுள்ள பிரபல புள்ளிகள் 13 பேரையும் கண்டறிந்தனர். அவர்கள் சம்பந்தமான விவரங்களை சேகரித்தனர். நிர்மலா அதனை நீதிபதிக்கே மெயில் செய்தாள். 13 பேருடைய இல்லங்களிலும், அலுவலகங்களிலும் ரைட் நடந்தது. அதில் அதிகபட்ச