ரஞ்சித் குருஜியிடம் இதை விவகாரத்தை கேட்டுவிடலாமென்று முடிவெடுத்தான். மறுநாள் காலை அங்கு சென்ற போது போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது, கூட்டத்தை விலக்கி பார்த்தபோது குருஜி தியான வகுப்பு மேடை நடுவில் மல்லாந்த நிலையில் இறந்து கிடந்தார். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது நேற்று இரவு யாரோ குருஜியை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டதாக சொன்னர்கள். மறுநாள் செய்தித்தாளில் பார்த்த போது சரண்யாவின் மரணத்திற்கு நான்தான் காரணம் என குருஜியின் கையில் இருந்த பேப்பரில் எழுதி இருந்ததாக போட்டிருந்தது, போலீஸ் ரஞ்சித்தையும், தீப்தியையும் விசாரித்தனர்.அப்போது ரஞ்சித் மறுபடியும் ஹோட்டலில் சரண்யாவோடு தங்கியிருந்த ஆளின் போட்டோவை காட்டினான்.போலீஸ் அந்த நபரை தேட தொடங்கினர். கிஷோர் ஜாமீனில் வெளியே வந்ததும் ரஞ்சித்துக்கு போன் செய்தான். நான் சரண்யாவை உண்மையா காதலிச்சேன் ஆனா என்னோட சூழ்நிலையால் வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணும்படி ஆயிடுச்சி ஆனா என்னால நிம்மதியா வாழ முடியல. அதனாலதான் நான் சரண்யாவை தேடி