ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 49

  • 624
  • 234

கம்பெனி தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்திருந்தது. கஸ்டமர்களிடம் நல்லதொரு அபிப்ராயம் இருந்தது. பிராஃபிட் ஆவரேஜ் அளவில் தான் இருந்தது. விஷால் முதல் வருடம் தானே போக போக சரி ஆகி விடும் என்றான். தீபாவின் இரண்டாவது ஓவிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தீபாவின் ஓவியங்களை பார்க்க இந்த முறை சென்ற முறையை விட அதிக பார்வையாளர்கள் வந்திருந்தனர். நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. விஷால் தீபாவுக்கு அவள் ஆசைப்பட்ட உடை ஒன்றை வாங்கி கொடுத்தான். விஷால் தீபாவளியை கொண்டாட சொந்த ஊரில் உள்ள புது வீட்டுக்கு சென்றான். ரொம்ப வருடம் கழித்து குடும்பத்தாருடன் கொண்டாடும் தீபாவளி ஆதலால் அவரவர் விருப்பத்திற்கே விட்டுவிட்டான். விஷாலின் பிள்ளைகள் பட்டாசுகளை வாங்கி குவித்தார்கள். அனன்யா அவர்கள் தீபாவளி கொண்டாடுவதை விஷாலுடன் சேர்ந்து ரசித்தாள். சுபாவும், தீபாவும் கூட பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். தீபாவளி பலகாரங்களை சுபா அம்மாவும், விஷால் அம்மாவும் செய்தார்கள். அனன்யா பிசினஸ் சுமாராக