ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 41

  • 930
  • 423

தீபாவை சென்னைக்கு அழைத்து சென்றான். தீபா சிறைக்கு பெயில் முடிந்து சென்றாள். கோர்ட்டில் வாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்திருந்தார்கள். விஷால் பெங்களூர் திரும்பினான். விஷால் தீபாவின் இந்த நிலமையை எண்ணி வருந்தினான். இரண்டு மாதங்களில் தீபாவின் பர்த்டே வருகிறது. அப்போது போய் பார்க்க வேண்டும் என எண்ணிக்கொண்டான். அனன்யாவிடமும் , சுபாவிடமும் இதை சொன்னான். தீபா அம்மா அவர்களுடன் இருப்பது ஆறுதலாக இருந்தது. ஒரு மாதம் கழித்து அனன்யா தனக்கு பெண் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று சொன்னாள். அவளையும் சுபாவையும் செக் அப் அழைத்து போயிருந்தான். டாக்டர் அனன்யா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார்.சுபா, அனன்யா இருவரும் மகிழ்ந்து போனார்கள். விஷால் இனிப்புகள் எல்லோருக்கும் வழங்கி கொண்டாடினான். தீபாவுக்கு இந்த செய்தியை உடனடியாக சொல்ல வேண்டும் என நினைத்தான். அனன்யா நானும் சென்னை வரேன் என்றாள். இப்போ அதிக தூரம் டிராவல் பண்ண கூடாது அடுத்த