ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 33

  • 1.3k
  • 528

அனன்யா அப்பா ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டதாக வந்த செய்தி கேட்டு அதிர்ந்தான். அனன்யா மனமுடைந்து போனாள்.இவனை கட்டிகொண்டு அழுதாள் . எல்லா வித இறுதி சடங்குகளையும் விஷால் செய்தான். அனன்யாவுக்கு தீபாவும், சுபாவும் ஆறுதல் கூறினர். அனன்யா அப்பாவின் எதிர்பாராத இழப்பை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை . அனன்யாவுக்கு ஆறுதல் கூற அவனிடத்தில் வார்த்தைகள் இல்லை.அனன்யா அப்பா சொத்து முழுவதையும் அனன்யாவுக்கும் , விஷாலுக்கும் சேர்த்து எழுதி இருந்தார். சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று அனன்யாவின் உறவினர்கள் சொல்லி வந்தனர். விஷால் அனன்யா ஆஸ்ட்ரேலியா போய் வந்த பிறகுதான் கல்யாணம் என்று உறுதியாக சொல்லிவிட்டான். இரண்டு மாதங்கள் கழித்து நிச்சயம் வைத்து கொள்ளலாம் என்று பேசி முடித்தார்கள். அனன்யாவும்,விஷாலும் சென்னை திரும்பினார்கள். சுபா ஏற்கனவே சென்னை போய் பாரமரிப்பின்றி கிடந்த வீட்டை சுத்தம் செய்து வைத்திருந்தாள். அனன்யா உடலாலும் மனதாலும் சோர்ந்து போயிருந்தாள் . அவளை வேலைக்கு