ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 20

  • 1.5k
  • 540

ஊட்டி ட்ரிப் முடிந்து மூவரும் ஊர் திரும்பினார்கள். சுபா அப்படியே ஹாஸ்டல் போய்விட்டாள் . நால்வருக்கும் அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. தீபா விஷாலுக்கு ஃபோன் பண்ணினாள். மறுபடி ஒரு முறை அதே மாதிரி இன்னும் குளிரான இடத்துக்கு போக வேண்டும் என்று சொன்னாள். அனன்யா போட்டோக்களை பகிர்ந்து கொண்டாள். விஷால் இன்னும் உலகமறியா பையனாகவே தோற்றமளித்தான்.மூன்று பெண்களும் அவனுடைய உலகில் பேரழகிகள் ஆகிய வலம் வந்தனர். சுபாவுக்கு ஃபோன் பண்ணி நன்றி சொன்னான் விஷால். 3 நாள் ரொம்ப குறைச்சல். ஒரு வாரமாவது இருந்திருக்கலாம் என்றாள் அனன்யா.அவளுக்குத்தான் எவ்வளவு ஆசை . மதியம் போல விஷாலுக்கு ஃபோன் செய்து விசாரித்தாள் . என்ன பண்ணுற விஷால் .என்னவோ போல இருக்கிறது. மூணு நாளா உன்கூட இருந்துட்டேனா இப்போ எல்லாத்துக்கும் உன் யோசனைதான் வருது. 4 மணி போல வரியா தீபா வீட்டுக்கு . சரி வரேன். தீபா