ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 2

  • 3.1k
  • 1.6k

 தான் தோற்றுப் போய் விட்டோம் என்பதை விஷால் நம்பவில்லை. மறுபடியும் முயற்சிக்க மனம் வரவில்லை. ரேணுகா டீச்சரின் கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. ஏனோ இவன் மனம் எதிலும் ஒட்டாமல் இருந்தது. சுபா இவனுக்கு உறுதுணையாக இருந்தாள் . ஏதாவது ஒன்றை செய்து அவனை அந்த தோல்வியில் இருந்து விடுபட செய்வதற்கு முயற்சி செய்தாள். ஒருவேளை அனன்யாவிடம் பிரதீப் விஷாலுடைய காதலைப் பற்றி சொல்லி இருப்பானோ என்று நினைத்தான். அப்படியே சொல்லியிருந்தாலும் இப்பொழுது அதைப் பற்றி பேசி என்ன பயன் இவன் அடுத்து என்ன செய்வதென்று யோசித்தான். இப்போது அவன் முன்னே இருப்பதெல்லாம் அவனுடைய எதிர்காலம். கடந்த காலம் எல்லாம் வெறும் மாயையாக தோற்றமளித்தது. அனன்யாவை நினைத்து நினைத்து தான் முழுக்க வெறும் கண்ணாடி பிம்பமாகவே மாறிவிட்டதாக நினைத்துக் கொண்டான். அவள் எதை செய்தாலும் அதை தனக்காகவே செய்கிறாள் என்று நினைத்துக் கொண்டது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். மேலும் பிரதீப் மூலமாக இன்னும்