இரவுக்கு ஆயிரம் கைகள் - 40

  • 1.4k
  • 558

குமார் எனக்கு ஒன்னும் தெரியாது நான் சாதாரணமாத்தான் விசாரிச்சேன் என்றான். சரி உனக்கு ஏதாவது விஷயம் தெரிஞ்சா எங்களுக்கு அவசியம் சொல்லு . கண்டிப்பா சார். வேற யாராவது மெசேஜ் பண்ணியிருக்காங்களா ? இல்லை சார் . ஒரு வேலை திவ்யா டெலிட் பண்ணியிருக்கலாம். திவ்யாவுடைய அப்பாவுக்கு போன் செய்தான். ஏதாவது டெலிட் பண்ணியிருந்தீங்கன்னா ப்ளீஸ் சொல்லுங்க ..ஒண்ணுமில்ல சார் . என் பொண்ணும் cousin தீபனும் கார் பார்க்கிங் ஏரியாவுல kiss பண்ண வீடியோ வந்திருந்திச்சு . ஓ அது எந்த நம்பர்லேயிருந்து வந்திருந்துச்சு .அது வேற யாருமில்ல அஞ்சலி அப்பாதான். இதை ஏன் மொதல்லேயே சொல்லலே . அவர் இப்படி செய்வார்னு நான் நெனைச்சு கூட பாக்கலே. எதுக்கும் அவர்கிட்ட விசாரிச்சு பாக்குறேன். அஞ்சலி அப்பாவுக்கு போன் போட்டான். அவர் காஞ்சிபுரத்தில் வேலை பார்த்து வந்தார். நீயெல்லாம் ஒரு மனுஷனா ஏதோ சின்ன பசங்க தப்பு பண்ணிட்டாங்க அத