இரவுக்கு ஆயிரம் கைகள் - 31

  • 1.8k
  • 687

இரவு அடர்ந்த பனியை பூசி இருந்தது . மிகவும் ரசிக்கத்தக்க குளிராக இருந்தது . ராம் அந்த ஹோட்டலின் முதல் மாடியை தேர்வு செய்த போதும் ஜன்னல் வழி காட்சி ரம்மியமாக இருந்தது . குளிர் காற்று இதமாக வீசியது. ராம் தனியாகத்தான் வந்திருந்தான் .ஊட்டி இத்தனை சுவாரஸ்யமாய் இருக்குமென்று நினைக்கவில்லை . திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது . வெளியே கதவை திறந்து பார்த்தான் , எல்லா அறைகளுக்கும் மின்சாரம் இல்லை . கொஞ்சம் பொறுங்க என்னனு பார்த்துடுவோம் என room boy பொறுமையாக பதிலளித்து கொண்டிருந்தான் . reception அருகே தவிப்பாய் ஒருவன் நின்று கொண்டிருந்தான். பாருங்க சார் கொஞ்சம் நிம்மதியா ஹனிமூன் வந்தா இங்கேயும் பவர் cut . ராம் அவனை புன்னகையுடன் சமாதானப்படுத்தினான் . தன் பெயர் கதிரேசன் என்றும் கல்யாணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிறதென்று சொன்னான். இப்போதான் வர நேரம் கிடைச்சது . தான்