இரவுக்கு ஆயிரம் கைகள் - 27

  • 2.3k
  • 666

இரவு பல ரகசியங்களை கொண்டது . மனித மனமும் தான். இதைப்பற்றி ராம் சிந்தித்து கொண்டிருந்த போது.. சார் என்ன சிந்தனைல இருக்கீங்க. தீப்தி ஏன் அடுத்தவர்களுக்காக அந்த முடிவை எடுத்தா ? உண்மையிலேயே நன்றிக்கடனுக்கு மதிப்பு இருக்குது போல . சார் அந்த கேஸ் விட்டு வெளிய வாங்க . இப்போ ஒரு புது கேஸ் வந்திருக்கு . அதுக்குள்ளயா ? பண மோசடி கேஸ் . ஏழுமலையை பேங்க் ல பணத்தை கையாடல் பண்ணிட்டதா சொல்லி அரெஸ்ட் பண்ணி இருக்காங்க . அவர் மேல எந்த தப்பும் இல்லனு ப்ரூவ் பண்ணனும் . ஏழுமலை போலீஸ் ஸ்டேஷன்லேயே இறந்துட்டாரு. அந்த பணத்தை கட்ட சொல்லி குடும்பத்தாரையும் தொந்தரவு பண்ணிருக்காங்க. அவங்க பையனும் பொண்ணும் வேற வழி இல்லாம நம்மகிட்டே வந்திருக்காங்க. பையன் பேரு பிரதீப் ,பொண்ணு பேரு ரோகினி . ரெண்டு பெரும் காலேஜ் ல படிக்கிறாங்க .