நினைக்காத நேரமேது - 47

  • 3.4k
  • 1.6k

நினைவு-47 நாட்கள் வழக்கம் போல நகரத் தொடங்கின. எந்தவொரு காரியத்தையும் மிக ஜாக்கிரதையாக செய்ய ஆரம்பித்திருந்தான் சத்யானந்தன். அதன் விளைவாய் ஏகப்பட்ட கெடுபிடிகள்... பல முஸ்தீபுகள் என அவனை நெருங்குவதற்கே அனைவருக்கும் மூச்சு முட்டிப் போயிற்று! ஒரே இடத்தில் வேலை செய்தாலும் கடமையாக சிரித்துக் கொள்ள முடியாத இக்கட்டான வேலைப்பளுவில் இருவருமே மாட்டிக் கொண்டு முழித்தனர். திவ்யா கேட்டதைப் போல சத்யாவில் புதைந்திருந்த கண்ணனை வெளிக்கொணர அவனால் முடியவே இல்லை. ஆனால் அதற்கு பதிலாக மனைவிக்காக பல காரியங்களை செய்து அவளை தன்பக்கம் இழுக்கத் தொடங்கினான். அவளுமே அவனுக்கு தோதாக மயங்கத் தொடங்கினாள். அலுவலகத்திலிருந்து வரும்போது அவளுக்காக எதையாவது வாங்கிக் கொடுத்து அவள் சந்தோஷமாக விழிவிரித்து வாங்கிக் கொள்வதைப் புன்னகையுடன் ரசிப்பான். "ஏன் பகல்ல கூட தள்ளித் தள்ளிதான் நிக்கணுமா? யாருமில்லாத நேரத்துல என்கிட்டே வந்து பேசலாம்ல தியா?” என்று சலுகையாகப் பேசி மனைவியை தன் கை வளைவிற்குள் இழுத்துக் கொண்டு