நினைக்காத நேரமேது - 43

  • 2.9k
  • 1.3k

நினைவு-43 அவினாசி வீட்டின் மொட்டைமாடி. அதன் ஒருபுறம் சத்யானந்தனின் படுக்கையறை. வசதியான அழகான சிறியதாக தனக்கென அமைத்துக் கொண்ட குருவிக்கூடு. என்ன… கொஞ்சம் பெரிய, நவீனரக குருவிக்கூடு. தனது ரசனைக்குத் தகுந்தவாறு அமைத்துக் கொண்ட படுக்கையறை  அது. அங்குதான் முதலிரவுக்கென்று திவ்யாவை உள்ளிருந்த படிக்கட்டின் வழியாக மேலே அழைத்து வந்து விட்டுட்டு வெளியே வந்தார் லட்சுமி. நாள் நட்சத்திரம் பார்த்து அனைத்து சடங்கையும் நடத்திவிட தீர்மானித்து எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டனர் பெரியவர்கள். 'விவரம் புரிந்த சின்னஞ்சிறுசுகள் சூழ்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்வர்' என்ற நம்பிக்கையில் அனைத்தும் நிகழ்ந்தேறி வருகிறது. 'எந்த ஏற்பாடும் இல்லாமல் அறை இயல்பாக இருக்கட்டும்' என அன்னையர்களிடம் மகன்  கூறிவிட, அதற்கு பரிசாக விஷ்வாவின் முறைப்பையும் பெற்றுக் கொண்டான். “வாழ்க்கையில ஒருநாள்... இதெல்லாம் அனுபவிக்கணும் மாப்ள!” என்று கன்னத்தில் இடிக்காத குறையாக கூறிவிட்டுச் சென்றான் நண்பன். அறையில் விட்டுவிட்டு லட்சுமி வெளியே சென்றதும், திவ்யா அறையில் பார்வையை