நினைக்காத நேரமேது - 38

  • 2.8k
  • 1.5k

நினைவு-38 சத்யானந்தனின் வீடு... உள்ளே வந்த நால்வரும் சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டனர். வீட்டின் செழுமை, வீட்டுக்கு சொந்தக்காரனின் வளர்ச்சியை செல்வாக்கை பறைசாற்ற, அவர்களது கண்களில் சிறிது மிரட்சி எட்டிப் பார்த்தது.  "வாங்கப்பா! யாரப் பாக்கணும்?" வீட்டுக்குள் வந்தவர்களை மங்கையர்க்கரசி வரவேற்க, "ம்மா… வந்தவங்களுக்கும் டிஃபன் ரெடி பண்ணச் சொல்லுங்கம்மா!" சொல்லிக் கொண்டே, சட்டையின் முழுக் கைப் பகுதியை நீட்டி பட்டனைப் போட்டவாறே படிகளில் இறங்கி வந்தான் சத்யா.  இரண்டு நாட்களாக சரியாக முகம் கொடுத்துப் பேசாத மகன் இன்று பேசியதில் ஆனந்தம் அந்த தாய்க்கு. அதே சந்தோஷத்தோடு வந்தவர்களுக்கு என்ன வேண்டும் என கேட்க ஆரம்பித்தார். வந்திருந்த நான்கு பேருக்கும் கிட்டத்தட்ட சத்யாவின் வயதுதான். சற்றே முன்னபின்ன இருக்கும். அதிக வித்தியாசம் இருக்காது. "எதுவும் வேண்டாம்‌." என்றனர் சங்கோஜமாக.  "உக்காருங்க! ஏன் நின்னுகிட்டே இருக்கீங்க? இதுவும் உங்களுக்கு அத்தை வீடுதான்." அவர்களை உபசரித்தவாறே, அவர்கள் முன்னே வந்து நின்றவனைப் பார்த்து