நினைக்காத நேரமேது - 21

  • 3.4k
  • 1.6k

நினைவு-21 மறுநாள் வழக்கம்போல் வேலைகள் நடக்க, எழுந்து வந்தவளைப் பார்த்தவன், அவளது முகத்தில் சிறுவாட்டத்தைக் கண்டான். கல்லூரி கிளம்பும் அறிகுறி அவளிடமில்லை. "திவ்யா! இன்னைக்கு காலேஜ் கிளம்பலயா?" எனக் கேட்டான் கண்ணன். "இல்ல கண்ணன்... போர்ஷன் முடிச்சுட்டாங்க! இனி படிக்கிற வேலை தான். அது தான் பிள்ளைகளுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு லீவு போட்டுட்டேன்!" என்று சோர்வாக கூறியவள், சமையலில் உதவ அடுக்களை சென்றுவிட்டாள். எனினும் அவள் முகத்தில் பழைய சுரத்தையில்லை என்பதைக் கவனித்தான் கண்ணன். பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பியதும், கண்ணனும் கடைக்கு கிளம்பினான். அனைவரும் கிளம்பியவுடன், திவ்யாவும் செல்லாத்தாளை உடன் அழைத்துக்கொண்டு வெளியே சென்று வந்தாள். மதியம் வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு, சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்தான். பவளமல்லி திட்டில் திவ்யா அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், சாமான்களை உள்ளே வைத்து விட்டு அவ்விடம் வந்தான். அவள் முகத்தைப் பார்க்க ஏதோவொரு மாற்றம். ஆனால் நன்றாக இருந்தது. உற்றுப் பார்க்க அவள் மூக்கில்