நினைக்காத நேரமேது - 10

  • 4.1k
  • 2.1k

நினைவு-10 அலுவலகம் வந்த இருவரும், ஏற்கனவே ஒரு மணி நேர‌ பெர்மிஷன், ஒன்றரை மணிநேரமாகிப் போனதில், வந்ததும்‌ வேலையில் கவனமாயினர். திவ்யாவை அழைத்த‌ மேனஜர், “நீ வந்ததும் உடனே எம்.டி உன்னை வந்து பார்க்கச் சொன்னாரும்மா!” என்று தகவல் கூறினார். முன்தினமே தேவானாந்தன் தன்னிடம் ஆடிட்டிங் பற்றிக் கூறியிருந்ததால், அது சம்பந்தப்பட்ட சில ஃபைல்களை எடுத்துக் கொண்டு, எம்.டி‌ அறை‌ நோக்கிச் சென்றாள். அறைக்கதவை தட்டி விட்டு, "எக்ஸ்கியூஸ்மீ சர்!" எனக் கேட்டுக்‌ கதவைத் திறந்து உள்ளே சென்றாள். "யெஸ்... கம் இன்!" ஆணவனின் கம்பீரக் குரல் கேட்டு, சட்டென அவள் இதயம் இயங்க மறுத்தது.   இல்லை... இவ்வளவு நாட்களாக இயந்திரமாக இயங்கிய இதயம், இக்குரல் கேட்டுத் தன் இயக்கத்தை மீட்டெடுத்ததா? கனவா? கற்பனையா? அல்லது நிகழ்காலத்தில் கரையும் நிகழ்வுகளா!  எத்தனை நாள்‌ ஏக்கம்... தவிப்பு! வேண்டுதல், எதிர்பார்ப்பு, இந்த‌ நொடிக்காக! சமீப காலமாகவே இப்படியொரு சந்திப்பு என்றாவது ஒருநாள் நிகழும்‌