நினைக்காத நேரமேது - 4

  • 5.1k
  • 2.6k

நினைவு-4 ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ பாவம் ராதா யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட நிழற்படத்தை எடுத்து தன்னவனின் முகம் வருடியவளின் மனம் நிஜம் உணர, கரை தாண்டத் தொடங்கிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள் திவ்யா. அவள் சகஜமாவதற்கும் நொடிநேரம் பிடித்தது. பின்னர் எப்பொழுதும் போல் புகைப்படத்திற்கு ‘பை’ சொல்லி மெல்லிய முத்தம் பதித்து முடித்து, தன்னறையை விட்டு வெளியே வந்தாள். அந்த காலை நேரத்தின் வழமையாக பிள்ளைகள் அனைவரும் பள்ளிக்கு தயாராகி விட்டு, சாப்பிடுவதற்கு வந்து அமரத் தொடங்கி இருந்தனர். சதிஷோடு சேர்ந்து திவ்யாவும், அவர்களுக்கெல்லாம் தட்டு எடுத்து வைக்க, தண்ணி வைக்க என்று சிறுசிறு உதவிகளை செய்ய ஆரம்பித்தாள். அங்கு வந்த லட்சுமி, "திவ்யா! உனக்கு டைமாச்சு பாரு! நீ முதல்ல