நினைக்காத நேரமேது - 2

  • 6.1k
  • 3.6k

நினைவு-2 "அக்கா! இந்த பிராப்ளம் மட்டும் எனக்கு சால்வ் ஆக மாட்டேங்குது. இதுக்குதான் எனக்கு கணக்குன்னாலே கடுப்பாகுது.” அங்கிருந்த சிறுவர்களில் பெரியவனான சதீஷ் மூக்கால் அழ, திவ்யா அலுப்பாக பார்த்தாள். "ஏன்டா, ப்ளஸ் பண்ண வேண்டிய எடத்துல மைனஸ்‌ பண்ணி வச்சா எப்படிடா வரும்? பார்முலா படி போட்டா கரெட்டா வந்துடும். கொஞ்சம் கவனிச்சு போடு!" அவள் எப்படிச் சொன்னாலும் சிறுவனின் மூளையோ ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது. "போங்கக்கா... பக்கம் பக்கமா படிக்கச் சொன்னாக் கூட படிச்சுடலாம். ஆனா இந்தக் நம்பர் கூட்டி கழிச்சு போடுறதுனாலே எனக்கு நாக்கு தள்ளுது.” என வெகுவாய் அங்கலாய்த்துக் கொண்டான் சதீஷ். திவ்யாவைச் சுற்றி பலதரப்பட்ட வயதில் பிள்ளைகள் பதினைந்துபேர்‌ வட்டமாக அமர்ந்திருந்தனர். பள்ளியில் தினசரி கொடுக்கும் அவர்களின் வீட்டுப் பாடங்களை பார்த்து என்னென்ன செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுக்கும் வேலையை தனதாக்கிக் கொண்டிருந்தாள். "ஏம்மா! நீயே அலுப்பா வந்திருப்ப...