கொல்லான் புலால்

  • 11.1k
  • 3.3k

தூரத்தில் 'மா மா மா....' என்று மாட்டின் கூக்குரலையும் தாண்டி ஒலித்தது அவர்களின் சத்தம் அது ஒரு வீண் பிதற்றல். நாட்டில் நடக்கும் சில ஒலி மாசுக்களில் அதுவும் ஒன்று இருந்தும் அந்த மாசில் நனைந்தபடி ஒரு கூட்டம் அதை செவி சாய்காமல் கேட்டு கொண்டிருந்தது'இந்த நாட்டின் புல்லுருவிகளான அந்த அரசியல்வதிகளை நாம் வல்லூறாக மாறி வேட்டையாட வேண்டும் நம் இரத்தத்தை குடிக்கும் இந்த பூச்சிக்களை நசிக்கிட புது புரட்சி செய்திட வேண்டும் நம்மை அடக்க நினைத்தால் ரேஷன் கார்டை தூக்கி வீசுவோம் நம் அடையாளத்தை அழிக்க நினைத்தால் ஆட்சியையே கவிழ்ப்போம்ம்ம்'"டேய் யாரா இவன் இப்படி கூவிக்கினு இருக்கான்,மதியோம் வெயில்ல நாஸ்டா கூட துண்ணாம வந்து குந்துன்னா இப்டி மொக்கைய போட்டுகினு இருக்கான்" என்று முனுசாமி கபாலி காதாண்டே முனுமுனுத்தான்."அட இர்ரா காசும் பிரியானியும் தரான் அது போதாதா நீ கம்முனு கிட இந்தா... அவ்ளோ தான் முடியபோது" என்று கபாலி