நயன மொழி

  • 20.3k
  • 3.4k

'படார்' என கீழே விழுந்தான் கயிறு அறுந்துவிட்டது போலும் இடுப்பு முறிந்திருக்ககூடும் ஆனால் அது நடக்கவில்லை கொஞ்சம் வருத்தம் தான் கார்க்கிக்கு "என்னாடா இது சாவு கூட நமக்கு சதி பண்ணுது தூக்குல தொங்கி போய் சேரலாம்னா இப்படி ஆயிருச்சு... ச்சீ"என தன்னை தானே நொந்து கொண்டு புலம்பினான். நள்ளிரவு இரண்டு மணி இருக்கும் சாகவும் முடியாமல் தூங்கவும் முடியாமல் தத்தளித்தான். இவன் புலம்பலை பார்த்தவர்களுக்கு இவன் செத்தே போய்ருக்கலாம் என்று தான் தோன்றும் ஆனால் அதற்கும் ஒரு கொடுப்பனை வேண்டுமே அது தான் இவனுக்கு வாய்க்கவில்லையே. இவன் செத்தாலும் இவனுக்காக கண்ணீர் சிந்த ஆளில்லாத போது இவன் வாழ்ந்து யாருக்கென்ன லாபம் ஒருவேளை இவன் நண்பர்கள் அருகில் இருந்திருந்தால் அந்த அபிப்ராயத்தை மாற்றிக்கொண்டிருப்பானோ என்னவோ அதற்கும் கொடுத்து வைக்கவில்லை இருவரும் குடும்பஸ்தன் ஆகிவிட்டார்கள்.செய்து வந்த வேலையும் இல்லை காதலித்த காதலியும் இல்லை. கல்யாணம் செய்து வைக்ககூட ஆளில்லை என விரக்தியினால்