கம்பன் கஞ்சனடி

  • 16.9k
  • 5.8k

யாரும் பார்க்காத நேரமது சட்டென மணமகனை தள்ளிவிட்டு மணமகள் தலைதெறிக்க ஓடினாள். மண்டபவமே திடுக்கிட்டது. மணகோலத்தில் நடந்து வந்துகொண்டிருந்தவள் திடிரென ஓட்டமெடுக்க காரணமென்ன என புலம்பியபடியே கண்ணாடி முன் நின்று யோசித்து கொண்டிருந்தாள் பர்வதம்.அச்சமயம் “மா! மா! அம்மா” என வாசலில் நின்று கத்தி கொண்டிருந்தான் பலதேவா.“டேய் என்னடா பிரச்சனை” என்று வினவியபடியே வந்தாள்.“எதுக்கு மா கார்லாம் புக் பண்ணிருக்க ஆட்டோல போய்ட்டு வந்துருக்கலாம்ல”“டேய் மானத்த வாங்காத டா வாடா” என்றாள் அவன் தாய் பர்வதம்.நடுவே பலதேவன் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துட்டு “டேய் இதுதான் கடைசி இதுக்கு மேல எங்களுக்கு தெம்பில்ல பேசமா சந்நியாசி ஆகிறு” என சிரித்து கொண்டே காரின் பின் சீட்டில் அமர்ந்தாள் பலதேவனின் அக்காள்.“உங்களுக்குளாம் என்ன பார்த்த நக்கலா இருக்கு ம்ம்” என கடுகடுத்துக் கொண்டே பார்த்தான் பலதேவன்.“என்னப்பா போலமா” என அவன் முதுகில் தட்டிவிட்டு காரின் முன் சீட்டில் ஏறினார் அவன் அப்பா