அவிழும் நறுமுகை

  • 17.3k
  • 1
  • 3.2k

ஏய்ய்யா பத்திரமா போயிட்டு வந்துருவல உன்ன தனியா விட மனசு கேக்க மாட்டேங்குது ய்யாநானும் வேனா உன் கூட வரவா ஆத்தோவ்! என்ன பேசிட்டு இருக்க அவன் போயிட்டு நல்லபடியா வந்துருவான் த்தாநீ பேயாம இரு ஏன் போட்டு விசும்பிட்டு கிடக்கவ போ டா பொசகெட்டவனே...உனக்கென்ன தெரியும் என் ஈர குலையலாம் நடுங்கிட்டு கெடக்கு வீரணனுக்கும் பொன்னிக்கும் நிகழ்ந்த அந்த உரையாடலை கூட கண்டு கொள்ளாமல் சுவற்றில் தொங்கி கொண்டிருந்த தன் தந்தையை பார்த்து கொண்டிருந்தான் அவன் பிம்பம் அவன் தந்தையின் மீது விழ கண்கள் மெல்ல முத்துபேச்சி மீது விழுந்தது அவளும் பாவடை சட்டையில் சிரித்த முகத்துடன் மஞ்சள் குங்குமமிட்டு மாலையுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தாள் பொன்னி வெறித்து பார்த்து இந்தாய்யா ராசா ! எம்மா தாயி பேச்சி! நீ தான் மா என் பிள்ளைக்கு துணையா இருந்து எந்த காத்தும் கருப்பும் அண்டாம பாத்துக்கணும்.அவன் நல்லபடியா போயிட்டு வந்தா உனக்கு மாவெளக்கு வச்சு பொங்க வைக்கிறேன்... என மூச்சு விடாமல் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டே திருநீற்றை