அன்றும் இன்றும்

  • 15.3k
  • 1
  • 2.1k

அன்றும் இன்றும் மல்லிகாவின் கணவர் ஓர் தனியார் நிறுவனத்தில் தான் பணி புரிந்து வந்தார்.மல்லிகாவோ வீட்டை நிர்வாகம் பண்ணி வந்தாள் . அவங்களுக்கு இரண்டு பசங்கள் இருதார்கள். தட்டி முட்டி மாத செலவுகளை எப்படி எப்படியோ ஓரளவுக்கு மல்லிகா சமாளித்து வந்தாள். சொல்லிக்கொள்ளும்படியாக மிச்சம் மீதி சேமிப்பு எதுவும் அவர்களுக்கு இருந்ததில்லை. அப்படி தடுமாறியிருக்கும் பொழுது தான் பக்கத்து விட்டு பரிமளாவின் மகளுக்கு திருமணம் என்று சொல்லி அழைப்பிதழும் வந்து சேர்ந்தது. எங்களுக்கு உற்றார் உறவினர்கள் என்று சொல்லிக்கொள்ள அப்படியொன்றும் பெரிதாக யாரும் இல்லை. நீங்க தான் முன்கூட்டியே முன்வந்து கூடமாடஒத்தாசை செய்து இந்த கல்யாணத்தை நடத்தி தரணம் என்று பரிமளா கூறினாள். அப்போதுதான் மல்லிகா யோசித்தாள் கல்யாணத்துக்கு செல்ல ஒரு நல்ல பட்டு சேலை கூட சரிவர இல்லையே என்று . என்ன பண்ணுவது, ஏது பண்ணுவது என்று அவளுக்கு ஒன்றும் தலை கால் புரியவில்லை.