“என்னமா தேனு உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான” என்று கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கேட்டார்.அனைவர் முன்பு பதில் கூற சிறிது பயந்த பெண்ணவள் தன் தாயின் கையினை இறுக பற்றி கொண்டாள்.அந்த தாயின் உள்ளத்திற்கு தெரியாதா தன் மகளை பற்றி அதனால் அவளின் முகத்தினை அவர் பார்க்க, அவருக்கு மட்டும் தெரியுமாறு தலையை ஆட்டி திருமணத்திற்கு சம்மதம் கூறினாள் தேனு என்று எல்லோராலும் அழைக்கப்படும் தேன்மதி.பெண்ணவளுக்கு இந்த திருமணத்தில் சம்மதம் என்று அவளின் தாய் அனைவரிடமும் கூறிய உடன் இதுவரை அங்கு இருந்த யாரையும் நிமிர்